/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
ஜலகண்டேஸ்வரர் கோவில் தேரில் தீ
/
ஜலகண்டேஸ்வரர் கோவில் தேரில் தீ
ADDED : மார் 13, 2025 01:50 AM
வந்தவாசி:தேரோட்டம் முடிந்து நிலைநிறுத்தப்பட்ட தேரின் மேல்பகுதி தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உள்ள சர்புத்திரி நாயகி உடனுறை ஜலகண்டேஸ்வரரர் கோவில் உள்ளது. இங்கு மாசி பிரம்மோத்சவம் விழா நடந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.
இதில், ஜலகண்டேஸ்வரர், சர்புத்திரி அம்மன் தனித்தனி தேரில் வீதி உலா சென்றனர்.
பின், இரவு, 11:00 மணிக்கு தேர் நிலை நிறுத்தப்பட்டது. அப்போது தேர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக வந்தவாசி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இதில், மேற்பகுதி லேசாக எரிந்து சேதமடைந்தது. பக்தர்கள் கற்பூரம், விளக்கு ஏற்றியபோது தீப்பிடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வந்தவாசி தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.