/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
அரசு மருத்துவமனை அலட்சியம்; சிகிச்சையின்றி பழ வியாபாரி பலி
/
அரசு மருத்துவமனை அலட்சியம்; சிகிச்சையின்றி பழ வியாபாரி பலி
அரசு மருத்துவமனை அலட்சியம்; சிகிச்சையின்றி பழ வியாபாரி பலி
அரசு மருத்துவமனை அலட்சியம்; சிகிச்சையின்றி பழ வியாபாரி பலி
ADDED : மார் 02, 2025 03:22 AM

ஆரணி : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்தவர் பழ வியாபாரி சூர்யா, 30. இவரது மனைவி ஜீவிதா, 27. இவர்களுக்கு மித்ரா என்ற எட்டு மாத குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் இரவு, சூர்யாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
உறவினர்கள் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பணியில் இருந்த டாக்டர்கள், செவிலியர்கள் இ.சி.ஜி., கூட எடுக்காமல், 'ஒன்றும் பிரச்னை இல்லை; வீட்டிற்கு செல்லுங்கள்' என, கூறி உள்ளனர்.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள், டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சூர்யாவை ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சூர்யா வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஆரணி அரசு மருத்துவமனை டாக்டர்கள் அலட்சியத்தால், சூர்யா பலியானதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். சிகிச்சை அளிக்காமல், அலைக்கழித்த டாக்டர்கள் மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க, வலியுறுத்தி உள்ளனர்.