/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
பள்ளம் தோண்டிய போது அம்மன் சிலை, வாள் மீட்பு
/
பள்ளம் தோண்டிய போது அம்மன் சிலை, வாள் மீட்பு
ADDED : ஆக 26, 2024 04:43 AM

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மத்துார் கிராம ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில், மயானத்துக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக, குழி தோண்டும் பணியில் தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது, 3 அடிக்கு குழி தோண்டிய நிலையில், 2 அடி உயரத்தில் அம்மன் கற்சிலை, 2 அடி நீளமுள்ள பித்தளை வாள் கிடைத்தது.
வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது.
மயானத்தை ஒட்டி அமைந்துள்ள ஏரிக்கரையில், 50 ஆண்டுகளுக்கு முன், மாரியம்மன் கோவில் இருந்தது.
நாளடைவில் பராமரிப்பின்றி சிதைந்த நிலையில், அம்மன் கற்சிலை மற்றும் பித்தளை வாள் கிடைத்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த பின், சிலை மற்றும் வாள் கிராம மக்களிடம் ஒப்படைக்கப்படும். அதுவரை தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் எனக்கூறி, வருவாய் துறை அதிகாரிகள் அவற்றை எடுத்துச் சென்றனர்.

