/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
வாலிபரை வெட்டிக்கொன்ற கூலித்தொழிலாளிக்கு 'ஆயுள்'
/
வாலிபரை வெட்டிக்கொன்ற கூலித்தொழிலாளிக்கு 'ஆயுள்'
ADDED : பிப் 27, 2025 01:24 AM
சேத்துப்பட்டு,:திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தேவிமங்கலத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கிரி, 46. இவர் மனைவி ரேகா, 40. இவர்களுக்கு, 2 குழந்தைகள். நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால், கணவரை பிரிந்த ரேகா, வெண்மணி கிராமத்திலுள்ள தன் தாய் வீட்டிற்குச் சென்றார்.
மனைவி பிரிவுக்கு காரணம், அதே கிராமத்தைச் சேர்ந்த தபேஷ், 24, என்ற வாலிபருடன் ஏற்பட்ட தொடர்புதான் என, கிரி சந்தேகித்தார்.
கடந்த 2013 மே, 12 இரவில், தபேஷை, கிரி மற்றும் அவரது நண்பர் ஆறுமுகம் அரிவாளால் வெட்டிக் கொன்றனர். சேத்துப்பட்டு போலீசார், கிரி, ஆறுமுகத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு, திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மதுசூதனன், நேற்று முன்தினம் மாலை, கிரிக்கு ஆயுள் தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்தார். ஆறுமுகம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மனோகரன் ஆஜரானார்.

