/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
ஜவ்வாது மலையில் 100க்கும் மேற்பட்ட கற்கால புதைகுழிகள் கண்டுபிடிப்பு

ADDED : மார் 28, 2024 12:33 AM

ஜமுனாமரத்துார்:திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில், 50,000த்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், 272க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கின்றனர்.
இங்குள்ள ஜமுனாமரத்துார் அடுத்த மேல்செப்பிலி மற்றும் கீழ்செப்பிலி கிராம பகுதியில் தொல்லியல் துறை அதிகாரிகள், ஆய்வு செய்ததில், 100க்கும் மேற்பட்ட பெருங்கற்களால் ஆன, கற்கால புதைகுழிகள் இருப்பதை கண்டறிந்தனர்.
அவை, 7.50 மீட்டர் அகலம், 1.50 மீட்டர் உயரம் கொண்டதாக உள்ளன. இந்த கற்கால புதைகுழிகளில், இறந்தவர்கள் உடலை புதைக்க பயன்படுத்தியதும், இறந்தவர்கள் உடலுடன், அவர்கள் பயன்படுத்திய கற்கால கருவிகளையும் வைத்து, அடக்கம் செய்ததும் தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு புதைகுழியிலும், அக்கால மக்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் இருந்தன.
பெரும்பாலான புதைகுழிகள் தென்மேற்கு மற்றும் வட கிழக்கு திசையை நோக்கி அமைக்கப்பட்டிருந்தன.
இதனால், பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே பூர்வீக குடிமக்களாகிய மலைவாழ் மக்கள், அங்கு இருந்திருக்க வேண்டும் என, தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்ற புதை குழிகள், கிருஷ்ணகிரி மற்றும் கோவை பகுதிகளில் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன.