/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
மணல் கடத்திய இயந்திரம் பறிமுதல் போலீசாரை தாக்கிய மூவருக்கு வலை
/
மணல் கடத்திய இயந்திரம் பறிமுதல் போலீசாரை தாக்கிய மூவருக்கு வலை
மணல் கடத்திய இயந்திரம் பறிமுதல் போலீசாரை தாக்கிய மூவருக்கு வலை
மணல் கடத்திய இயந்திரம் பறிமுதல் போலீசாரை தாக்கிய மூவருக்கு வலை
ADDED : மே 30, 2024 09:16 PM
செய்யாறு,:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பாலாற்று படுகையில் நேற்று முன்தினம் இரவு பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தி மணல் கடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. அதன்படி, துாசி எஸ்.ஐ., சரவணன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.
அவர்களை பார்த்ததும் அங்கிருந்த மணல் கடத்தும் கும்பல் தப்பியது. பின், அங்கிருந்த பொக்லைன் இயந்திரத்தை போலீசார் விஜயகுமார், ரஞ்சித் ஆகியோர் ஸ்டேஷனுக்கு எடுத்து சென்றனர். வழியில் உக்கம்பெரும்பாக்கம் காலனி அருகே அன்றிரவு, 9:00 மணியளவில், அந்த வழியாக பைக்கில் வந்த உக்கம் பெரும்பாக்கத்தை சேர்ந்த மாரிமுத்து, அவரது மகன்கள் தினேஷ், விக்னேஷ் ஆகிய மூவரும் ஆபாசமாக பேசி, போலீசாரை தாக்கினர்.
போலீசார், ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்து மற்ற போலீசாரை வரவழைத்தனர். இதனால், மாரிமுத்து மற்றும் அவரது இரு மகன்களும் அங்கிருந்து தப்பினர். தலைமறைவான மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.