/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
தி.மலைக்கு இன்று சிறப்பு பஸ் இயக்கம்
/
தி.மலைக்கு இன்று சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : மே 22, 2024 06:32 AM
சென்னை : இன்று பவுர்ணமி என்பதால், சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, திருவண்ணாமலை கோவிலுக்கு, அதிகம் பேர் பயணிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை கருத்தில் வைத்து, கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று வழக்கமான பேருந்துகளுடன் 330 பேருந்துகளும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 225 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும். இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 30 'ஏசி' பேருந்துகள், கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயணியர் www.tnstc.in எனும் இணையதளம் அல்லது tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணிக்கலாம் என, விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.

