ADDED : பிப் 25, 2025 07:11 AM
ஆரணி : ஆரணி மற்றும் அரக்கோணம் அருகே ஏரியில் மூழ்கி இருவர் பலியாகினர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 45; கூலித்தொழிலாளி. மனைவி பிரியா; இரு மகன்கள் உள்ளனர். வெங்கடேசன், நேற்று முன்தினம் வெட்டியான் தொழுவம் கிராமத்தில் மரம் வெட்டும் வேலைக்கு சென்றார். தாங்கல் கிராமத்திலுள்ள ஏரியில் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 42; கூலித்தொழிலாளி. இவரது மகன் ஷாம், 18; கல்லுாரி முதலாமாண்டு மாணவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ், 18. இருவரும் நண்பர்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம், தணிகை போளூரில் உள்ள கமலேஷின் உறவினர் வீட்டருகே, நேற்று முன்தினம் ஏரியில் குளிக்கச் சென்றனர். ஷாம் நீரில் மூழ்கினார்.
ஷாமை மீட்டபோது, அவர் மூச்சுத்திணறி இறந்தது தெரிந்தது. அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

