sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

சாத்தனுார் அணையில் 19,500 கன அடி நீர் திறப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

/

சாத்தனுார் அணையில் 19,500 கன அடி நீர் திறப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சாத்தனுார் அணையில் 19,500 கன அடி நீர் திறப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சாத்தனுார் அணையில் 19,500 கன அடி நீர் திறப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


ADDED : டிச 03, 2024 07:29 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: சாத்தனுார் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், 19,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரை-யோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள

சாத்தனுார் அணை, 119 அடி உயரம் கொண்டது. தொடர் மழையால் நேற்று காலை, முழு

கொள்ள-ளவை அணை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீர் அப்ப-டியே உபரி நீராக

வெளியேற்றப்பட்டது. இதன்படி காலை, 11:00 மணிக்கு, 19,500 கன அடி நீர்

திறக்கப்பட்டது. இதனால் கரையோ-ரமுள்ள கொளமஞ்சனுார், மேல் ராவந்தவாடி,

சதாகுப்பம், அல்-லப்பனுார் உள்ளிட்ட, 14 கிராம மக்களுக்கு வெள்ள அபாய

எச்ச-ரிக்கை விடுத்துள்ளனர். * திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஜவ்வாதுமலை அடிவாரத்தில்

கமண்டல ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, 62 அடி உயர செண்பகத்தோப்பு அணை,

58 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும், 3,500 கன அடி நீர் அப்படியே

வெளியேற்றப்-பட்டு வருகிறது. இதனால் படவேடு, மல்லிகாபுரம், புஷ்பகிரி,

சந்தவாசல், ராமபுரம் உள்ளிட்ட கரையோர கிராம மக்கள், பாது-காப்பான

இடங்களுக்கு செல்ல, நீர் வளத்துறை அதிகாரிகள் எச்ச-ரித்துள்ளனர். * திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில், ஜமுனாமரத்திலுள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து

கொட்டுவதால், குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஜவ்வாதுமலையில் தொடர் மழையால், நாகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கீழ்

அரசம்பட்டு, கண்ணமங்கலம் உள்ளிட்ட பல பகு-திகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.* திருப்பத்துார் மாவட்டம் ஏலகிரி மலை ஜலகம்பாறை நீர்வீழ்ச்-சியில் தண்ணீர்

ஆர்ப்பரித்து கொட்டுவால், குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us