/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
திருவண்ணாமலை கோவிலுக்கு வந்த பக்தர் மயங்கி விழுந்து சாவு
/
திருவண்ணாமலை கோவிலுக்கு வந்த பக்தர் மயங்கி விழுந்து சாவு
திருவண்ணாமலை கோவிலுக்கு வந்த பக்தர் மயங்கி விழுந்து சாவு
திருவண்ணாமலை கோவிலுக்கு வந்த பக்தர் மயங்கி விழுந்து சாவு
ADDED : ஜன 26, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை:சென்னை, கொளத்துாரை சேர்ந்தவர் மணி, 50, தனியார் நிறுவன தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். நீண்ட நேரம் வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தார்.
மீண்டும் சென்னை செல்ல கோவிலிலிருந்து புறப்பட்டு, அரை கி.மீ., தொலைவிலுள்ள பஸ் ஸ்டாண்ட் சென்றார். வழியில் மயக்கம் ஏற்பட்டு, ஒரு கடை முன் மயங்கி விழுந்தார்.
அங்கிருந்த மக்கள், அவருக்கு தண்ணீர் கொடுத்தும், மயக்கம் தெளியாத நிலையில் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.