/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
பிச்சை எடுத்து பணம் பறிக்கும் கும்பல்
/
பிச்சை எடுத்து பணம் பறிக்கும் கும்பல்
ADDED : நவ 01, 2024 07:00 AM
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து பலரும் வழிபடுகின்றனர்.
இதனால், பல பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள், மலையை கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
இவ்வாறு வரும் பக்தர்கள் பணம், துணி, உணவு உள்ளிட்ட பொருட்களை தானமாக கிரிவலப்பாதையிலுள்ள சாதுக்களுக்கு வழங்கி செல்கின்றனர்.
இவ்வாறு தானம் வழங்கும் பக்தர்களை ஏமாற்றி, பணம் பறிக்கும் வகையில், கடந்த சில நாட்களாக, 'எங்களது பொருட்களை யாரோ திருடி சென்று விட்டனர்; சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கிறோம்' எனக்கூறி, பண உதவி கேட்டு, அவர்களிடம் பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய்வதாக கூறி, திருநங்கைகள், 500 ரூபாய், 1,000 ரூபாய் கட்டாய வசூலும் செய்கின்றனர். இச்செயல்களால், பக்தர்கள் கிரிவலம் செல்லும்போது, மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இதுபோன்ற மோசடி கும்பலை, போலீசார் கிரிவலப் பாதையிலி ருந்து அப்புறப்படுத்த, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.