/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
ரூ.2.92 கோடியில் ஜவ்வாதுமலையில் சாகச சுற்றுலா தலம்; அமைச்சர் வேலு
/
ரூ.2.92 கோடியில் ஜவ்வாதுமலையில் சாகச சுற்றுலா தலம்; அமைச்சர் வேலு
ரூ.2.92 கோடியில் ஜவ்வாதுமலையில் சாகச சுற்றுலா தலம்; அமைச்சர் வேலு
ரூ.2.92 கோடியில் ஜவ்வாதுமலையில் சாகச சுற்றுலா தலம்; அமைச்சர் வேலு
ADDED : ஜூன் 29, 2025 01:13 AM
திருவண்ணாமலை, ''ஜவ்வாதுமலையில், 2.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பலாமரத்துார் கிராமத்தில் சாகச சுற்றுலா தலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது,'' என, அமைச்சர் வேலு பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில், 25வது கோடை விழா நேற்று தொடங்கியது. பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர், தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த மலர் கண்காட்சி மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சிகளை திறந்து வைத்து பார்வையிட்டனர்.
பின்னர் அமைச்சர் வேலு பேசியதாவது: ஜவ்வாதுமலையில், 2 கோடியே, 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பலாமரத்துார்
கிராமத்தில் சாகச சுற்றுலா தலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாத்தனுார் அணை பகுதியில் ஓய்வறைகள், பூங்கா மற்றும் சுற்றுலா அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. ஜவ்வாதுமலை ஆதிசிவன் கோவில் புனரமைக்கும் பணிக்கு, 2 கோடியே, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி முதல் சென்னை வரை எத்தனையோ திட்டங்களை நெடுஞ்சாலை துறை சார்பில் நிறைவேற்றி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், ''தமிழகத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, ஜவ்வாது மலையானது இயற்கை எழில் நிறைந்த சுற்றுலாத்தலம். 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய, புதிய கற்காலத்தைச் சேர்ந்த கல்லாயுதங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்,'' என்றார்.
துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ் டி.ஆர்.ஓ., ராம்பிரதீபன், மாவட்ட வன அலுவலர் சுதாகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.