/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
பால் குடித்த குழந்தை மூச்சு திணறி பலி
/
பால் குடித்த குழந்தை மூச்சு திணறி பலி
ADDED : பிப் 21, 2025 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அடுத்த ஆர்ப்பாக்கத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 31. இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கீதா, 28. இவர்களது, 11 மாத பெண் குழந்தை மேகவர்ஷினி, நேற்று முன்தினம் மாலை, பால் குடித்து கொண்டிருந்தாள்.
அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பெற்றோர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, மங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

