/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
பஸ் -- கார் நேருக்கு நேர் மோதல்; லாரி உரிமையாளர்கள் 4 பேர் பலி
/
பஸ் -- கார் நேருக்கு நேர் மோதல்; லாரி உரிமையாளர்கள் 4 பேர் பலி
பஸ் -- கார் நேருக்கு நேர் மோதல்; லாரி உரிமையாளர்கள் 4 பேர் பலி
பஸ் -- கார் நேருக்கு நேர் மோதல்; லாரி உரிமையாளர்கள் 4 பேர் பலி
ADDED : ஏப் 13, 2025 11:42 PM

திருவண்ணாமலை : அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில், லாரி உரிமையாளர்கள் நான்கு பேர் பரிதாபமாக பலியாகினர்.
திருவண்ணாமலை அரசு போக்குவரத்து பணிமனைக்கு சொந்தமான அரசு பஸ், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு திருவண்ணாமலை புறப்பட்டது. டிரைவர் பழனிவேல், 50, பஸ்சை ஓட்டினார்.
திருவண்ணாமலை அருகே சோ.காட்டுக்குளம் என்ற இடத்தில் நேற்று அதிகாலை, 3:10 மணியளவில் பஸ் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த 'ஹூண்டாய் கிரெட்டா' கார், கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ் மீது நேருக்குநேர் மோதியது.
இதில், காரில் பயணித்த ஸ்டாலின், 44, சதீஷ், 40, சரோஷ், 40, சைலேஷ், 40, ஆகியோர், சம்பவ இடத்திலேயே பலியாகினர். கீழ்பென்னாத்துார் போலீசார், நான்கு பேரின் உடல்களையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்தனர்.
இதில், புதுச்சேரியை சேர்ந்த லாரி உரிமையாளர்களான நான்கு பேரும், லாரி வாங்குவதற்காக பெங்களூரு சென்று விட்டு, சொந்த ஊருக்கு திரும்பியது தெரியவந்தது. கார் டிரைவரின் துாக்க கலக்கத்தில் இந்த விபத்து நடந்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.