/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
தி.மலையில் பெண் போலீசை தாக்கிய பக்தர்கள் மீது வழக்கு
/
தி.மலையில் பெண் போலீசை தாக்கிய பக்தர்கள் மீது வழக்கு
தி.மலையில் பெண் போலீசை தாக்கிய பக்தர்கள் மீது வழக்கு
தி.மலையில் பெண் போலீசை தாக்கிய பக்தர்கள் மீது வழக்கு
ADDED : டிச 08, 2025 05:12 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பெண் போலீசை தாக்கிய ஆந்திர பக்தர்கள் ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவண்ணாமலையில், டிச., 3ம் தேதி ஏற்றப்பட்ட மஹா தீபம், தொடர்ந்து, 11 நாட்கள் எரியும். இதனால் நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.
கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபடுகின்றனர். கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசலால், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
போளூர் ஸ்டேஷன் பெண் போலீஸ் மேகனா, நேற்று முன்தினம் இரவு கோவிலில் பணியில் இருந்தார். வரிசையில் நின்ற பக்தர்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த போது, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் தாக்கினர்.
இதனால் மேகனா புகாரின்படி, ஆந்திர மாநில பக்தர்களான சரிதா, அர்சிதா, வீரேஷ், சைனீ த், மாணிக்கராவ் ஆகியோர் மீது திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள னர்.

