/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
குழியில் தவறி விழுந்து கல்லுாரி மாணவர் பலி
/
குழியில் தவறி விழுந்து கல்லுாரி மாணவர் பலி
ADDED : ஜன 03, 2025 11:28 PM
வந்தவாசி:விழுப்புரம் மாவட்டம், பூதேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ், 20. இவர், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் தனியார் கல்லுாரியில், இறுதி ஆண்டு படித்தார்.
கடந்த 31ல் இரவு, வந்தவாசி அடுத்த பழவேரி கிராமத்தில் உள்ள தன் நண்பர் வீட்டிற்கு சென்றவர், பின்பு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை ராமன், போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரித்து வந்த நிலையில், பழவேரி அருகே ராமலிங்காபுரம் கூட்ரோட்டில் சிறுபாலம் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், 'ஹோண்டா' பைக்குடன் தவறி விழுந்து பலியாகி கிடந்ததை, நேற்று முன்தினம் இரவு அப்பகுதி மக்கள் பார்த்தனர்.
தெள்ளார் போலீசார் விசாரிக்கின்றனர்.

