/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகள் கைது
/
மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகள் கைது
ADDED : ஜன 05, 2025 09:06 AM
கண்ணமங்கலம் :   திருவண்ணாமலை மாவட்டம் காளசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள், 55. இவரது மகன் சீராளன், 30, மகள்கள் ராஜலட்சுமி, 28, ராஜேஸ்வரி, 25. ராஜலட்சுமி, ராஜேஸ்வரி திருமணமாகி, இருவருக்கும் குழந்தை இல்லை.
சீராளன் மனைவி தேவிகலா, 25. கணவர் ராணுவத்தில் பணிபுரியும் நிலையில், தேவிகலா, குழந்தைகளுடன் கோவிந்தம்மாளுடன் வசித்தார். டிச. 10ம் தேதி கோவிந்தமாள் வீட்டில் மயங்கி விழுந்ததாக கூறி, வேலுார் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். சாவில் சந்தேகம் உள்ளதாக, ராஜேஸ்வரி கணவர் முருகன் புகார் அளித்தார்.
போலீசார் கோவிந்தம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதில், கோவிந்தம்மாள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. போலீசார், தேவிகலாவிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
போலீசார் கூறியதாவது: மருமகள் நடத்தையில் கோவிந்தம்மாள் சந்தேகத்துடன் பேசியுள்ளார். ஆத்திரமடைந்த தேவிகலா, கோவிந்தம்மாளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். தேவிகலாவிடம் விசாரிக்கிறோம். இவ்வாறு கூறினர்.

