தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ இறந்து விழுந்த காகங்கள்: பறவை காய்ச்சல் பாதிப்பா?

 இறந்து விழுந்த காகங்கள்: பறவை காய்ச்சல் பாதிப்பா?

 இறந்து விழுந்த காகங்கள்: பறவை காய்ச்சல் பாதிப்பா?


ADDED : பிப் 11, 2026 07:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 07:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கம்: ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் உள்ள நிலையில், தமிழக - ஆந்திர எல்லையோர பகுதிகளில், சுகாதாரத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பறவை காய்ச்சல் பாதிப்பால், காகங்கள் சுருண்டு விழுந்து பலியானது உறுதி செய்யப் பட்டுள்ளது.

இந்நிலையில், திருவண் ணாமலை மாவட்டம், செங்கம் நகராட்சி பகுதியில் பஸ் ஸ்டாண்ட் மற்றும் தெருக்களில் காகங்கள் சுருண்டு விழுந்து இறந்து வருகின்றன. இது,பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரத்துறையினர், செங்கம் நகராட்சியில் புகை மருந்து அடிப்பது, மருந்து தெளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இறந்த காகங்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என ஆய்வு செய்ய, அவற்றை கால்நடைத்துறை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காகங்கள் இறப்பு சம்பவம், பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us