/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
தீப திருவிழா முன்னேற்பாடு பணிகள் 17 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
/
தீப திருவிழா முன்னேற்பாடு பணிகள் 17 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
தீப திருவிழா முன்னேற்பாடு பணிகள் 17 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
தீப திருவிழா முன்னேற்பாடு பணிகள் 17 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
ADDED : அக் 28, 2025 01:51 AM
திருவண்ணாமலை, தீப திருவிழா முன்னேற்பாடுகளை கண்காணிக்க, 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தர்ப்பகராஜ் கூறினார்.
இது குறித்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் நவ., 23ம் தேதி கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்க உள்ளது. வரும் டிச., 3ம் தேதி, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவை காண வருகை தரும் பக்தர்களுக்கு, அடிப்படை வசதிகள் செய்வது உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளை செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இதில், பக்தர்களின் வசதிக்காக, 24 தற்காலிக பஸ் ஸ்டாண்ட், 118 கார் பார்க்கிங் மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில், தற்காலிக பஸ் ஸ்டாண்ட், கார் பார்க்கிங் மையம், பொது போக்குவரத்து சாலை வசதி
ஆகியவற்றை மேம்படுத்தி கண்காணிக்க, 4 போக்குவரத்து வசதி குழுக்கள் அமைக்கப்படும். அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் மருத்துவ வசதிகளை ஒருங்கிணைக்க, 2 குழு, குடிநீர், கழிப்பறை துாய்மை தடையற்ற மின் வசதியை கண்காணிக்க, 4 அடிப்படை வசதி குழு, கண்காணிப்பு கேமரா பாதுகாப்பு வசதி, காவலர்களுக்கு அடிப்படை வசதிகள் அமைத்து தருவதை கண்காணிக்க, 3 பாதுகாப்பு வசதி குழுக்கள் அமைக்கப்படும். தொலைதொடர்பு மொபைல் போன் ஆப் வடிவமைப்பு, ஊடக ஒருங்கிணைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்க பொதுமக்கள் தொடர்பு குழுக்கள், தேர் திருவிழா, உணவு பாதுகாப்பு, அன்னதான வசதி, மாட்டு சந்தை ஏற்பாடு, ஆகிய பணிகளை கண்காணிக்க, 4 பணி குழுக்கள் என, மொத்தம், 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களின் செயல்பாடுகளை டி.ஆர்.ஓ., ராம் பிரதீபன் ஒருங்கிணைந்து காண்காணிப்பார்.
இவ்வாறு, அவர் கூறினார்.

