/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
போதிய பஸ் வசதி இல்லாமல் தி.மலையில் பக்தர்கள் தவிப்பு
/
போதிய பஸ் வசதி இல்லாமல் தி.மலையில் பக்தர்கள் தவிப்பு
போதிய பஸ் வசதி இல்லாமல் தி.மலையில் பக்தர்கள் தவிப்பு
போதிய பஸ் வசதி இல்லாமல் தி.மலையில் பக்தர்கள் தவிப்பு
ADDED : மே 12, 2025 11:45 PM

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவிலில், 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக, திருவண்ணாமலை நகருக்குள் வாகனங்கள் வரும் ஒன்பது இணைப்பு சாலைகளில், 20 தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைத்து, 4,533 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மூன்று நாட்களுக்கு, எட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
ஆனாலும், திருவண்ணாமலையிலிருந்து சென்னை, வேலுார், விழுப்புரம், சேலம், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு செல்ல போதுமான பஸ்கள் இயக்கப்படாததால், அதிகாலை, 4:00 மணி முதல் காலை, 8:00 மணி வரை பஸ்கள் இல்லாமல், சாலை நடுவில் அமர்ந்து பக்தர்கள், எப்போது பஸ் வரும் என காத்திருந்தனர்.
வந்த சில பஸ்களிலும் முண்டியடித்து ஏறினர். இதனால், வயதானவர்கள், குழந்தை வைத்திருந்தோர், பஸ்சில் ஏற முடியாமல் தவித்தனர். வேலுார் மற்றும் விழுப்புரம் மார்க்கமாக, சென்னைக்கு இயக்கப்பட்ட ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நிற்கக்கூட இடமில்லாமல் தவித்த நிலையில் பயணித்தனர்.