/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
கரும்பு தொட்டில் கட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்
/
கரும்பு தொட்டில் கட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED : டிச 11, 2024 01:30 AM
திருவண்ணாமலை, டிச. 11-
குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்தவர்கள், திருவண்ணாமலை, தீப திருவிழாவில், கரும்பு தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவண்ணாமலையை ஆண்ட, வள்ளாள மஹாராஜன் குழந்தை பேறு இல்லாமல், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை நினைத்து வழிபட்டதால், அருணாசலேஸ்வரரே, வள்ளாள மஹாராஜாவிற்கு குழந்தையாக பிறந்தாக, தல புராணங்கள் கூறுகின்றன. இதை நினைவு கூறும் வகையில், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை நினைத்து வழிபட்டு, குழந்தை பாக்கியம் கிடைத்தவர்கள், தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில், அக்குழந்தையை கரும்பு தொட்டில் கட்டி சுமந்து, மாடவீதி வலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.