/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
'பாஸ்ட் புட்'டில் தகராறு வி.சி. பிரமுகர் மீது வழக்கு
/
'பாஸ்ட் புட்'டில் தகராறு வி.சி. பிரமுகர் மீது வழக்கு
'பாஸ்ட் புட்'டில் தகராறு வி.சி. பிரமுகர் மீது வழக்கு
'பாஸ்ட் புட்'டில் தகராறு வி.சி. பிரமுகர் மீது வழக்கு
ADDED : ஜன 21, 2024 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வந்தவாசி : திருவண்ணாமலை மாவட்டம், மீசநல்லுாரை சேர்ந்தவர் வி.சி. கட்சி தெள்ளார் மத்திய ஒன்றிய செயலர் ஞானபிரகாசம், 45. இவரது உறவினர் கலைவாணன், 42. இருவரும் நேற்று முன்தினம் இரவு, தெள்ளாரிலுள்ள, 'பாஸ்ட் புட்' கடைக்கு சாப்பிட சென்றனர்.
அங்கு உணவு தர தாமதமானதால், கடை ஊழியர் பாண்டியன், 21, மற்றும் அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்கினர்.
இருதரப்பினரும், தனித்தனியாக போலீசில் புகார் செய்தனர்.
தெள்ளார் போலீசார் இரு தரப்பை சேர்ந்த, ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்துவிசாரிக்கின்றனர்.