/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
10ம் முறையாக ஆனைமடுவு அணை நிரம்பியது மதகு வழியே நீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
10ம் முறையாக ஆனைமடுவு அணை நிரம்பியது மதகு வழியே நீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
10ம் முறையாக ஆனைமடுவு அணை நிரம்பியது மதகு வழியே நீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
10ம் முறையாக ஆனைமடுவு அணை நிரம்பியது மதகு வழியே நீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 27, 2024 04:07 AM
வாழப்பாடி: ஆனைமடுவு அணை கட்டி, 10ம் முறையாக நிரம்பியுள்ளது. தொடர்ந்து தலைமை மதகு வழியே தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டையில், 67.25 அடி உயரத்தில், ஆனைமடுவு அணை உள்ளது. அந்த அணையால் சுற்றுவட்டார பகுதிகளில், 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சில மாதங்களில் பெய்த மழையால் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. கடந்த, 24ல் ஆணைமடுவு அணை பகுதியில், 15.03 செ.மீ., மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் அணை நிரம்பி எந்த நேரத்திலும் தண்ணீர் திறக்கப்படலாம் என, கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை மூலம் எச்சரிக்கை விடப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு, அணை நீர்மட்டம், 65.29 அடியாக இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி, தலைமை மதகு வழியே தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி அணையில், 65.25 அடி உயரத்தில், 247.5 மில்லியன் கன அடி நீர் தேங்கியுள்ளது. நீர்வரத்து வினாடிக்கு, 162 கன அடியாக இருந்தது. அதேபோல் அணையில் இருந்து, தலைமை மதகு வழியே வினாடிக்கு, 162 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆனைமடுவு அணை கட்டுமான பணி, 1982ல் தொடங்கி, 1993ல் முடிந்தது. அதற்கு பின், 31 ஆண்டுகளில், 9 முறை அணை நிரம்பியுள்ளது. இறுதியாக, 2021ல் அணை நிரம்பியது. 3 ஆண்டுகளுக்கு பின் தற்போது, 10ம் முறையாக அணை நிரம்பியுள்ளது' என்றனர்.