/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
எறும்புத்தின்னி விற்க முயன்ற தீயணைப்பு வீரருக்கு 'காப்பு'
/
எறும்புத்தின்னி விற்க முயன்ற தீயணைப்பு வீரருக்கு 'காப்பு'
எறும்புத்தின்னி விற்க முயன்ற தீயணைப்பு வீரருக்கு 'காப்பு'
எறும்புத்தின்னி விற்க முயன்ற தீயணைப்பு வீரருக்கு 'காப்பு'
ADDED : செப் 22, 2025 03:59 AM
திருவண்ணாமலை: எறும்புத்தின்னி செதில்களை விற்க முயன்ற தீயணைப்பு துறை வீரர் உட்பட இருவரை போளூர் வனத்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வனச்சரக அலுவலக எல்லை பகுதியில், எறும்பு தின்னியை வேட்டையாடி செதில்களை அதிக விலைக்கு விற்க வைத்திருப்பதாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அக்கும்பலை பிடிக்க செதில்களை வாங்கும் புரோக்கர் போல், வனத்துறையினர் அவர்களை தொடர்பு கொண்டு போளூருக்கு வருமாறு கூறினர். இதை நம்பி, 3 கிலோ எறும்புத்தின்னி செதில்களுடன் இருவர் நேற்று வந்தனர்.
அவர்களை பிடித்து விசாரித்ததில், ஜமுனாமரத்துார் தீயணைப்புத்துறை நிலைய காவலர் ஜெயபால், 37, திருப்பத்துார் மாவட்டம், கருங்காலிப்பட்டியை சேர்ந்த சிவன், 65, என தெரிந்தது.
இவர்களுடன் வந்த ஜமுனாமரத்துாரை சேர்ந்த ராஜசேகர் என்பவர் தப்பினார். போலீசார், இருவரையும் கைது செய்து, எறும்பு தின்னி செதில்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.