/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
கிணற்றில் மூழ்கி கபடி வீரர் பலி
/
கிணற்றில் மூழ்கி கபடி வீரர் பலி
ADDED : அக் 20, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கம்: கிணற்றில் மூழ்கி கபடி வீரர் பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கத்தில், தீபாவளியை முன்னிட்டு கபடி போட்டி நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பல்வேறு பகுதியிருந்து வீரர்கள் வந்தனர்.
புதுச்சேரி, மதகடிப்பட்டை சேர்ந்த பாலா, 20, என்ற வாலிபரும் போட்டியில் பங்கேற்க வந்தார்.
நேற்று காலை அதே பகுதியில், 30 அடி ஆழத்திற்கு தண்ணீர் உள்ள ஒரு விவசாய கிணற்றில் குளிக்க நண்பர்களுடன் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார். நண்பர்கள், அவரை உயிருடன் மீட்க முயன்றும், சிறிது நேரத்துக்கு பின் சடலமாக மீட்கப்பட்டார்.
மேல்செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.