/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
தி.மலையில் மார்கழி பவுர்ணமி கிரிவலம்
/
தி.மலையில் மார்கழி பவுர்ணமி கிரிவலம்
ADDED : ஜன 14, 2025 05:39 AM

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கானோரும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும், சிவனாக நினைத்து வழிபடும் அண்ணாமலையார் மலையை வலம் வந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
அதன்படி, மார்கழி மாத பவுர்ணமி திதி நேற்று அதிகாலை, 5:29 முதல், இன்று, 14ம் தேதி அதிகாலை, 4:46 மணி வரை உள்ளதால், இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறையால், பல்வேறு பகுதிகளிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோவிலில், 5 மணி நேரம் காத்திருந்து, அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்தனர்.