/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
நிதி முறைகேடு செய்த ஊராட்சி செயலர்கள் 'சஸ்பெண்ட்'
/
நிதி முறைகேடு செய்த ஊராட்சி செயலர்கள் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜன 29, 2025 07:50 PM
ஆரணி:ஆரணி அருகே நிதி முறைகேடு செய்த மூன்று ஊராட்சி செயலர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றியம் ராந்தம்கொரட்டூர், கல்லேரிப்பட்டு, பனையூர் ஆகிய பஞ்சாயத்துகளில் செயலராக, சேட்டு, குமார், அருண்குமார், ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.
மூவரும் சில மாதங்களாக பணி நேரத்தில் மது போதையில் பணிகளை செய்யாமலும், பஞ்., கணக்குகளை தணிக்கை செய்யாமலும், தொடர்ச்சியாக அலுவலக ஆய்வு கூட்டங்களில் பங்கேற்காமலும் இருந்து வந்தனர்.
மேலும், பஞ்., அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் செய்யாமலும், பஞ்., நிதியை கையாடல் செய்வதாகவும், பொதுமக்கள் ஆரணி ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., ராஜேஸ்வரியிடம் புகார் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய அவர், மூன்று பஞ்., செயலாளர்களும், நிதி முறைகேடில் ஈடுபட்டதும், பொதுமக்கள் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை எனவும் உறுதியானது. இதையடுத்து அவர், பஞ்., செயலர்கள் ராந்தம்கொரட்டூர், சேட்டு, கல்லேரிப்பட்டு குமார், பனையூர் அருண்குமார் ஆகிய மூவரையும், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

