/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
இன்ஸ்டாவில் பழகி தொல்லை தேனி வாலிபருக்கு போக்சோ
/
இன்ஸ்டாவில் பழகி தொல்லை தேனி வாலிபருக்கு போக்சோ
ADDED : ஜன 03, 2025 03:04 AM
செய்யாறு:தேனி மாவட்டம், உத்தமபாளையம் அடுத்த கூடலுார் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ், 19. சில மாதங்களாக திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்த, 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது மாணவியுடன் இன்ஸ்டாகிராம் என்ற சமூகவலைதளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டு, தங்கள் மொபைல் எண்ணை பரிமாறி அடிக்கடி பேசி வந்தார். நேற்று முன்தினம் புத்தாண்டை முன்னிட்டு விமல்ராஜ், மாணவியை பார்க்க தேனியில் இருந்து மாணவி வீட்டிற்கு வந்தார்.
மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த விமல்ராஜ், திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் வாலிபரை பிடித்து, பிரம்மதேசம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து போக்சோவில் விமல்ராஜை கைது செய்தனர்.

