/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
கோவில் பெயரில் போலி டிரஸ்ட் ஐந்து பேர் மீது போலீஸ் வழக்கு
/
கோவில் பெயரில் போலி டிரஸ்ட் ஐந்து பேர் மீது போலீஸ் வழக்கு
கோவில் பெயரில் போலி டிரஸ்ட் ஐந்து பேர் மீது போலீஸ் வழக்கு
கோவில் பெயரில் போலி டிரஸ்ட் ஐந்து பேர் மீது போலீஸ் வழக்கு
ADDED : ஜன 31, 2025 02:23 AM
திருவண்ணாமலை:திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், அறநிலையத்துறைக்கு சொந்தமான துர்வாசர் கோவில் பெயரில், போலி டிரஸ்ட் துவங்கி, பக்தர்களிடம் பணம் பறிக்க முயன்ற, ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், அறநிலையத்துறைக்கு சொந்தமான துர்வாசர் கோவில் உள்ளது. இங்கு சந்துரு, 38, என்பவர் பூசாரியாக உள்ளார். இவர், துர்வாசர் மகரிஷி அன்னதான அறக்கட்டளை எனும் பெயரில், அவரது தாய் பச்சையம்மாள், உறவினர்கள் ரேகா, ரேவதி, சுரேஷ் ஆகியோரை உறுப்பினராக கொண்ட போலியான டிரஸ்ட் தொடங்கியிருந்தார்.
இதன் பெயரில் வங்கி கணக்கு துவங்கி, அதன் மூலம் பக்தர்களிடம் பணம் வசூலிக்க முயற்சி நடந்தது. இந்த டிரஸ்ட், அரசு பதிவு பெற்றதை போல, மோசடியான ஆவணங்களை தயாரித்து இருந்தார். இதுகுறித்து அறநிலையத்துறை ஆணையர் ஜோதிலட்சுமிக்கு சென்ற புகார் படி, விசாரணையில் அது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, அறநிலையத்துறை செயல் அலுவலர் உஷா, பூசாரி சந்துரு மீது, திருவண்ணாமலை மேற்கு போலீசில் புகார் அளித்தார்.
பூசாரி சந்துரு உள்ளிட்ட, ஐந்து பேர் மீது போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

