/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ஹெல்மெட் அபராதம் ரூ.7.10 கோடி விழிப்புணர்வு நிகழ்வில் போலீசார் தகவல்

ADDED : அக் 05, 2025 01:37 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதம் வரை, ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் சென்றவர்களிடம், 7.10 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்பை முன்னிட்டு, டூவீலரில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டிய அவசியம் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் நடந்தது. போலீசார் மற்றும் அரசு அலுவலர்கள் ஈடுபட்டனர்.
சென்னிமலை பஸ் ஸ்டாண்டில், கலெக்டர் கந்தசாமி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஈரோடு காளை மாட்டு சிலை பகுதியில் எஸ்.பி., சுஜாதா, டூவீலரில் வந்தவர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விளக்கி, சாக்லெட் மற்றும் பூ வழங்கினார்.
இதுபற்றி போலீசார் கூறியதாவது: நடப்பாண்டில் கடந்த செப்., 25ம் தேதி வரை, ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டியது, பின்னால் அமர்ந்து சென்றது தொடர்பாக, 71 ஆயிரம் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து, ஏழு கோடியே, 10 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. முழு மூச்சாக ஹெல்மெட் அபராதம் விதித்திருந்தால் தொகை பிரமிக்க வைத்திருக்கும். இதில்லாமல் ஈரோடு மாவட்டத்தில் இலகு ரக மற்றும் கனரக வாகன விபத்துகள், 1,784 நிகழ்ந்து, 418 பேர் பலியாகி உள்ளனர். கடந்தாண்டு, 2,410 சாலை விபத்துகளில், 697 பேர் பலியாகினர்.
சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காதது, விழிப்புணர்வின்றி செல்வதே விபத்துக்கு காரணமாகிறது. இவ்வாறு கூறினர்.