ADDED : ஏப் 11, 2026 06:28 PM
அ நிறம் | அளவு
திருவண்ணாமலை: செங்கம் அருகே, உரிய ஆவணமின்றி காரில் எடுத்து வரப்பட்ட, 2.80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்ராவந்தவாடி பகுதியில், தண்டராம்பட்டு - தானிப்பாடி சாலையில், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது, திருவண்ணாமலை, அண்ணாநகரை சேர்ந்த மஜாஹித், 45, என்பவரின் காரை நிறுத்தி, சோதனை செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி, அவர் எடுத்து வந்த, 2.80 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, தேர்தல் அலுவலர் இளவரசனிடம் ஒப்படைத்தனர்.
