/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
தமிழக துணை சபாநாயகர் கல்லுாரியில் ரூ.57 லட்சம் திருட்டு
/
தமிழக துணை சபாநாயகர் கல்லுாரியில் ரூ.57 லட்சம் திருட்டு
தமிழக துணை சபாநாயகர் கல்லுாரியில் ரூ.57 லட்சம் திருட்டு
தமிழக துணை சபாநாயகர் கல்லுாரியில் ரூ.57 லட்சம் திருட்டு
ADDED : டிச 22, 2025 09:10 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், துணை சபாநாயக-ருக்கு சொந்தமான பொறியியல் கல்லுாரியில், 57 லட்சம் ரூபாய் திருட்டு போயுள்ளது.
திருவண்ணாமலையை அடுத்த சின்னகாங்கி-யனுார் கிராமத்தில், துணை சபாநாயகர் பிச்சாண்-டிக்கு சொந்தமான எஸ்.கே.பி., பொறியியல் கல்-லுாரி உள்ளது. பிச்சாண்டி தம்பி கருணாநிதி நிர்-வகித்து வருகிறார். கல்லுாரி வளாகத்தில் மெட்ரிக் பள்ளி, சட்டக்கல்லுாரி இயங்கி வருகி-றது.
கடந்த, 15ம் தேதி மாலை, பொறியியல் கல்லுாரி முதல்வர் பாஸ்கரன், 42, கல்லுாரி காசாளர் அறையில், மாணவர்கள் செலுத்திய கல்வி கட்ட-ணத்தை பீரோவில் வைத்து பூட்டிவிட்டு கேட் சாவியை காவலாளியிடம் கொடுத்து சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, காசாளர் அறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அறைக்குள் வைத்திருந்த, 57 லட்சத்து, 77,128 ரூபாய் கொள்ளை போனது தெரிந்தது. பாஸ்கரன் புகார் படி, கீழ்பென்னாத்துார் போலீசார் விசாரித்து வருகின்-றனர்.