/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
மாணவிக்கு பாலியல் தொல்லை பள்ளி நிர்வாகி குண்டாஸில் கைது
/
மாணவிக்கு பாலியல் தொல்லை பள்ளி நிர்வாகி குண்டாஸில் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை பள்ளி நிர்வாகி குண்டாஸில் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை பள்ளி நிர்வாகி குண்டாஸில் கைது
ADDED : அக் 26, 2025 01:00 AM
ஓசூர், ஓசூர் அருகே, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, போக்சோ சட்டத்தில் கைதான பள்ளி நிர்வாகி மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தன்னார்வ அமைப்பு சார்பில், குழந்தைகள் இல்லம் மற்றும் 5ம் வகுப்பு வரை பள்ளி நடத்தப்பட்டு வந்தது. இங்கு தங்கி, 4ம் வகுப்பு படித்த, 9 வயது மாணவிக்கு, பள்ளி நிர்வாகி ஷாம் கணேஷ், 63, என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, கடந்த மாதம் ஓசூர் அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
மேலும், சம்பவத்தை வெளியே தெரியாமல் மறைக்க முயன்றதாக, ஷாம் கணேஷ் மனைவி ஜோஸ்பின், 61, ஆசிரியை இந்திரா, 36, மற்றும் செல்வராஜ், 63, நாதமுரளி, 37, ஆகிய, 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஷாம் கணேசை மட்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பரிந்துரை செய்தார். அதையேற்று, குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகல், சேலம் மத்திய சிறையில் உள்ள ஷாம் கணேஷிடம் நேற்று வழங்கப்பட்டது.

