/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
ரூ.16 கோடியில் கட்டிய பாலம் 3 மாதத்தில் இடிந்த அவலம்
/
ரூ.16 கோடியில் கட்டிய பாலம் 3 மாதத்தில் இடிந்த அவலம்
ரூ.16 கோடியில் கட்டிய பாலம் 3 மாதத்தில் இடிந்த அவலம்
ரூ.16 கோடியில் கட்டிய பாலம் 3 மாதத்தில் இடிந்த அவலம்
ADDED : டிச 04, 2024 01:04 AM

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானுார் கிராமங்களை இணைக்கும் பாலம், 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
அப்பகுதி, 16 கிராம மக்கள் பயனடையும் வகையில், நெடுஞ்சாலைத்துறை மூலம், 'நபார்டு' வங்கி மற்றும் கிராம சாலைகள் திட்டத்தில் கடந்த 2024 செப்., 2ல் முடிக்கப்பட்டது.
அமைச்சர் வேலு, இதை மக்கள் பயன்பாட்டிற்கு கடந்த செப்., 2ல் திறந்து வைத்தார்.
இந்நிலையில், 'பெஞ்சல்' புயல் மழையால், சாத்தனுார் அணை நிரம்பி, 1.60 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டதால், தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கட்டி முடிக்கப்பட்ட, மூன்று மாதத்திலேயே பாலம் இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
இந்த பாலம் வழியாக விவசாயிகள், 20,000 ஏக்கரில் பயிரிட்ட கரும்பை, அரவைக்காக, மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரி மற்றும் டிராக்டரில் எடுத்து செல்வது வழக்கம். பாலம் இடிந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.