ADDED : ஜன 18, 2024 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போளூர்,:திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூர் கிராமத்தில் இரண்டு இடங்களில் நேற்று முன்தினம் முதல் ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து காளை விடும் விழா நடத்த விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதற்காக முன்னதாக அனுமதி கேட்டு போளூர் போலீசில் மனு அளித்தனர்.
எனினும் போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் அனுமதியை மீறி நேற்று முன்தினம் மாலை காளை விடும் விழாவை கிராம மக்கள் நடத்தினர்.
இதையடுத்து அனுமதியின்றி காளை விடும் விழா நடத்த ஏற்பாடு செய்த 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.