/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
பழனிசாமி வாகனம் சென்றபோது சரிந்து விழுந்த வரவேற்பு வளைவு
/
பழனிசாமி வாகனம் சென்றபோது சரிந்து விழுந்த வரவேற்பு வளைவு
பழனிசாமி வாகனம் சென்றபோது சரிந்து விழுந்த வரவேற்பு வளைவு
பழனிசாமி வாகனம் சென்றபோது சரிந்து விழுந்த வரவேற்பு வளைவு
ADDED : ஆக 17, 2025 02:04 AM

செங்கம்:திருவண்ணாமலையை அடுத்த செங்கம் பகுதியில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் வாகனம் சென்றபோது, திடீரென வரவேற்பு வளைவு சரிந்து விழுந்தது.
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், தமிழகம் முழுதும் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று, திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்துார் ஆகிய சட்டசபை தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.
முன்னதாக திருவண்ணாமலையில் தங்கியிருந்த அவர், ஓட்டலில் இருந்து, செங்கம் தொகுதிக்கு பிரத்யேக வேனில் சென்றார். அவரது வாகன அணிவகுப்பு வரிசையில், முதலில் பைலட் கார், 2வதாக அவரது வாகனம் சென்றது.
புதுப்பாளையம் அருகே நேற்று மாலை 5:30 மணியளவில் திடீரென சூறாவளி காற்று வீசியது. அப்போது, பழனிசாமியை வரவேற்பதற்காக, சாலையில் அ.தி.மு.க.,வினர் அமைத்திருந்த வரவேற்பு வளைவு, திடீரென சரிந்து விழுந்தது. பைலட் காரும், பழனிசாமியின் வாகனமும் கடந்து சென்ற அடுத்த சில வினாடிகளில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பழனிசாமியின் வாகனத்துக்கு பின்னால், வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. சரிந்த வரவேற்பு வளைவு அகற்றப்பட்ட பின், அவை புறப்படடன. இந்த விபத்தில், வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.