/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
தி.மலை கோவில் உண்டியலில் திருடியவர் கைது
/
தி.மலை கோவில் உண்டியலில் திருடியவர் கைது
ADDED : ஜூலை 13, 2025 01:21 AM
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில் கைவிட்டு, 5,000 ரூபாய் திருடியவரை, போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தரிசனம் செய்ய பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கோவில் தங்க கொடிமரம் அருகே உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அது மற்ற உண்டியல்களை விட மேல்புறம் அகலமாக இருக்கும்.
நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில் கோவிலுக்கு வந்த ஒருவர், அந்த உண்டியலில் கையை விட்டு, காணிக்கை பணத்தை எடுத்தார். இதைப்பார்த்த கோவில் ஊழியர்கள், அவரை பிடித்து, திருவண்ணாமலை டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சபரிநாதன், 40, என தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து திருடிய, 5,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

