ADDED : செப் 23, 2024 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அரியாப்பாடியைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 21; சென்னை தனியார் நிறுவன ஊழியர்.
இவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் ராஜேஷ், 22, மற்றும் முள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மருந்து கடை ஊழியர் மணிகண்டன், 21, ஆகிய மூவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு, திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் பைக்கில் சென்றனர்.
எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் பைக் மீது மோதியதில், துாக்கி வீசப்பட்ட மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.