/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
தெலுங்கானா பக்தரின் கழுத்தை அறுத்து கொன்ற இருவர் கைது
/
தெலுங்கானா பக்தரின் கழுத்தை அறுத்து கொன்ற இருவர் கைது
தெலுங்கானா பக்தரின் கழுத்தை அறுத்து கொன்ற இருவர் கைது
தெலுங்கானா பக்தரின் கழுத்தை அறுத்து கொன்ற இருவர் கைது
ADDED : ஜூலை 10, 2025 08:57 PM
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், தெலுங்கானா பக்தரின் கழுத்தை அறுத்து கொலை செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையில், ஜூலை, 7 அதிகாலை, 2:00 மணியளவில், ஐதராபாத்தை சேர்ந்த வித்தியாசாகர், 35, கிரிவலம் சென்றார். போளூர் சாலையில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அருகே சென்றபோது, பைக்கில் வந்த இருவர், அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர்.
தர மறுத்தவரின் கழுத்தை கத்தியால் வெட்டி விட்டு, அவர் வைத்திருந்த, 5,000 ரூபாய், ஏ.டி.எம்., கார்டை பறித்து தப்பினர். காயமடைந்த வித்தியாசாகர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரணையில், திருவண்ணாமலையை சேர்ந்த குகனேஷ்வரன், 21, தமிழரசன், 25, ஆகியோர், வித்யாசாகரை கத்தியால் கழுத்தை அறுத்து, வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.