/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை தாக்கி கொள்ளை
/
நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை தாக்கி கொள்ளை
நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை தாக்கி கொள்ளை
நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை தாக்கி கொள்ளை
ADDED : ஆக 26, 2025 12:25 AM
சேத்துப்பட்டு:
நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, பெண்ணை கட்டிப்போட்டு தாக்கி நகை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த இடையன் குளத்துார் ரோட்டு தெருவை சேர்ந்தவர் கோடீஸ்வரி, 50; இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். அனைவரும் சென்னையில் பணியாற்றி வருகின்றனர்.
கோடீஸ்வரி தனியாக வசிக்கிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணியளவில், முன் பக்கமாக இருவரும், பின்பக்கமாக இருவரும் கதவுகளை உடைத்து நான்கு பேர் வீட்டிற்குள் புகுந்தனர்.
துாங்கிக் கொண்டிருந்த கோடீஸ்வரியின் வாயை பொத்தி, கை, கால்களை கயிற்றால் கட்டி, பணம், நகை கேட்டு மிரட்டினர். பதில் கூறாததால் இரும்பு ராடால் தாக்கினர்.
பின், பீரோவை உடைத்து, 10,000 ரூபாய், கோடீஸ்வரி அணிந்திருந்த 7 சவரன் நகையை பறித்தனர்.
வீடு முழுதும் மிளகாய் பொடியை துாவி தப்பினர். கோடீஸ்வரி கயிறுகளை அகற்றி விட்டு வெளியே வந்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். கொள்ளை கும்பலை சேத்துப்பட்டு போலீசார் தேடி வருகின்றனர்.

