/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
அண்ணாமலையார் மலையில் உருண்டு நிற்கும் 40 டன் பாறையை உடைக்கும் பணி துவக்கம்
/
அண்ணாமலையார் மலையில் உருண்டு நிற்கும் 40 டன் பாறையை உடைக்கும் பணி துவக்கம்
அண்ணாமலையார் மலையில் உருண்டு நிற்கும் 40 டன் பாறையை உடைக்கும் பணி துவக்கம்
அண்ணாமலையார் மலையில் உருண்டு நிற்கும் 40 டன் பாறையை உடைக்கும் பணி துவக்கம்
ADDED : ஜன 23, 2025 06:29 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலையில் கடந்த டிச., 1ல், ஏற்பட்ட நிலச்சரிவில் மலையிலிருந்து உருண்டு, அந்தரத்தில் நிற்கும், 40 டன் எடையுள்ள பாறையை உடைக்கும் பணியில், நிபுணர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலையடிவாரத்தில், 25,000க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. பெஞ்சல் புயல் மழையால், திருவண்ணாமலையில் கடந்த, டிச., 1ம் தேதி அண்ணாமலையார் மலையில், 6 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஓரிடத்தில் உருண்டு வந்த ராட்சத பாறை, மலை அடிவாரத்தில். வ.உ.சி., நகர், 11வது தெருவில் ஒரு வீட்டின் மீது விழுந்ததில், வீட்டினுள் இருந்த, 7 பேர் சிக்கி பலி-யாகினர். மேலும், 20 வீடுகள் சேதமடைந்தன.
அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில், 40 டன் எடையுள்ள மற்றொரு பாறை மலையிலிருந்து உருண்டு வந்து, வ.உ.சி., நகர், 9 வது தெரு, மலையடிவாரத்தில், எந்த நேரத்திலும் உருண்டு, வீடு-களின் மீது விழும் அபாய நிலையில், குறைவான பிடிமானத்-துடன், அந்தரத்தில் தொங்கி கொண்டுள்ளது. இதை உடைத்து எடுக்கும் பணியில், திருச்சியை சேர்ந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த பாறை உடைக்கும் நிபுணர் குழுவை சேர்ந்த, 10 பேர், 'சைல்ட் ராக் கிராக்' என்ற முறை மூலம், பாறையில் துளை-யிட்டு, வெடி பொருள் நிரப்பி, அதிகளவு சிதறாமல் வெடிக்கும் முறையில், பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதை தொடர்ந்து மேலும், சில பாறைகள் மலையிலிருந்து உருண்டு வரும் அபாய நிலையில் உள்ளன. அவற்றையும் உடைத்தெடுக்கும் பணியை செய்ய உள்ளனர்.

