/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
ரூ.1,500 கடனுக்காக தொழிலாளி கொலை
/
ரூ.1,500 கடனுக்காக தொழிலாளி கொலை
ADDED : மே 04, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த இளையாங்கன்னி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி டேவிட், 45. இவர், அதே பகுதியைச் சேர்ந்த பீட்டர், 52, என்பவரிடம் 20 நாட்களுக்கு முன், 1,500 ரூபாய் கடன் வாங்கினார். நேற்று முன்தினம் மாலை பீட்டர் மற்றும் அவரது நண்பரான பீட்டர்ராஜ், 45, ஆகியோர் டேவிட்டிடம், 1,500 ரூபாயை திரும்ப கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பீட்டர், பீட்டர் ராஜ் இருவரும் சேர்ந்து அருகில் இருந்த, ஹாலோ பிரிக்ஸ் கல்லால், டேவிட் தலையில் தாக்கியதில் பலியானார்.
தானிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து, பீட்டர், பீட்டர் ராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர்.