/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
நர்சிங் மாணவியை கடத்த முயன்றவாலிபர் போக்சோவில் கைது
/
நர்சிங் மாணவியை கடத்த முயன்றவாலிபர் போக்சோவில் கைது
நர்சிங் மாணவியை கடத்த முயன்றவாலிபர் போக்சோவில் கைது
நர்சிங் மாணவியை கடத்த முயன்றவாலிபர் போக்சோவில் கைது
ADDED : ஏப் 19, 2025 01:11 AM
ஆரணி :ஆரணி அருகே, 17 வயது நர்சிங் மாணவியை கடத்த முயன்ற வாலிபரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பேண்ட் வாசிக்கும் தொழிலாளி யோகேஷ், 19. கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 17 வயது நர்சிங் படிக்கும் மாணவியை காதலிப்பதாக கூறி வந்தார். பின்னர் யோகேஷின் நடவடிக்கையை பிடிக்காத மாணவி, காதலிக்க மறுத்து அவரிடம் பேசாமல் இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, யாருமில்லாத நேரத்தில் மாணவியின் வீட்டிற்கு சென்ற யோகேஷ், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு, கடத்தி செல்ல முயன்றார். இதில், அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் யோகே ைஷ தட்டி கேட்டனர். ஆத்திரமடைந்த யோகேஷ், அங்கிருந்தவர்களை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றார்.இது குறித்து, ஆரணி அனைத்த மகளிர் போலீசார் விசாரித்து, யோகே ைஷ போக்சோவில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

