/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
மாணவியை கடத்த முயற்சி வாலிபர் போக்சோவில் கைது
/
மாணவியை கடத்த முயற்சி வாலிபர் போக்சோவில் கைது
ADDED : ஏப் 19, 2025 01:18 AM
ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பேண்ட் வாசிக்கும் தொழிலாளி யோகேஷ், 19. கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 17 வயது நர்சிங் படிக்கும் மாணவியை காதலிப்பதாக கூறி வந்தார். பின்னர் யோகேஷின் நடவடிக்கையை பிடிக்காத மாணவி, காதலிக்க மறுத்து அவரிடம் பேசாமல் இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, யாருமில்லாத நேரத்தில் மாணவியின் வீட்டிற்கு சென்ற யோகேஷ், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு, கடத்தி செல்ல முயன்றார்.
இதில், அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் யோகே ைஷ தட்டி கேட்டனர். ஆத்திரமடைந்த யோகேஷ், அங்கிருந்தவர்களை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றார்.
இது குறித்து, ஆரணி அனைத்த மகளிர் போலீசார் விசாரித்து, யோகே ைஷ போக்சோவில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சித்தோட்டில் பைக் மீது விழுந்த
போதை ஆசாமி பரிதாப பலி
பவானி, ஏப். 19
சித்தோடு அருகே நடுப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 56. இவருக்கு திருமணமாகவில்லை.
சித்தோடு அருகே, டெக்ஸ்டைல்ஸ் ஒன்றில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம், சித்தோடு-ஈரோடு சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில், மது அருந்திவிட்டு, வீட்டிற்கு செல்வதற்காக அவரது பேஷன் புரோ பைக்கை எடுக்க முயன்ற போது, போதையில் எடுக்க முடியாமல், பைக் மீது விழுந்தார்.
இதில் தலையில் பலத்த அடிபட்டதால், அக்கம்பக்கத்தினர் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ
மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.