ADDED : ஜன 29, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழ்பென்னாத்துார்:கீழ்பென்னாத்துார் அருகே, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவரை, நான்கு பேர் கும்பல் வெட்டி கொன்றது.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் அடுத்த சிறுநாத்துார் சாலையூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 32; ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். இவரது தாத்தா கோபால், 88.
இருவரும் விவசாய நிலத்திலுள்ள வீட்டில் நேற்று முன்தினம் இரவு துாங்கி கொண்டிருந்தனர்.
அப்போது அடையாளம் தெரியாத நான்கு பேர் கும்பல், கத்தியால் சரமாரியாக வெட்டியதில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
படுகாயமடைந்த கோபால், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கீழ்பென்னாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

