/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
கடன் கேட்ட நண்பர் பல் உடைப்பு: வாலிபர் கைது
/
கடன் கேட்ட நண்பர் பல் உடைப்பு: வாலிபர் கைது
ADDED : ஜூலை 26, 2011 12:28 AM
திருச்சி: திருச்சியில் கடன் தகராறில் நண்பரின் பல்லை கல்லால் அடித்து உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி விமானநிலையம் அருகில் உள்ள குளவாய்ப்பட்டி விநாயகர் நகரை சேர்ந்தவர் முஸ்தபா (46). அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (30). இருவரும் நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன் ஆறுமுகம், முஸ்தபாவிடம் 500 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். நேற்று அந்த பணத்தை திருப்பி தரும்படி முஸ்தபா, ஆறுமுகத்திடம் கேட்டார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அருகில் கிடந்த கருங்கல்லை எடுத்து ஆறுமுகம் முஸ்தபாவை சரமாரியாக தாக்கினார். இதை சற்றும் எதிர்பாராத முஸ்தபா அதிர்ச்சி அடைந்தார். தாக்குதலில் முஸ்தபாவின் முன்புறம் இருந்த பற்கல் உடைந்தது. காயமடைந்த அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து முஸ்தபா கொடுத்த புகாரின் பேரில், விமானநிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.