/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
அமைச்சர் உறவினர் கல்லுாரியில் மாணவி துாக்கிட்டு தற்கொலை
/
அமைச்சர் உறவினர் கல்லுாரியில் மாணவி துாக்கிட்டு தற்கொலை
அமைச்சர் உறவினர் கல்லுாரியில் மாணவி துாக்கிட்டு தற்கொலை
அமைச்சர் உறவினர் கல்லுாரியில் மாணவி துாக்கிட்டு தற்கொலை
ADDED : மார் 01, 2025 01:26 AM
திருச்சி, அமைச்சர் நேரு குடும்பத்தாருக்கு சொந்தமான கல்லுாரியில், மாணவி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம், ராம்ஜிநகர் அருகே, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு குடும்பத்துக்கு சொந்தமான, கேர் என்ற இன்ஜி., மற்றும் கலை அறிவியல் கல்லுாரி உள்ளது. இங்கு, அரியலுார் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்த திவ்யா, 19, என்ற மாணவி, பி.காம்., படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திவ்யா, கல்லுாரி விடுதியில் உள்ள தன் அறை வாசலில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். ராம்ஜிநகர் போலீசார் வழக்கு பதிந்து, திவ்யாவின் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
.