ADDED : ஜன 30, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எல்பின் மோசடி முக்கிய நபர் கைது
திருச்சி ;திருச்சி, மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு எல்பின் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தை அழகர்சாமி, ரமேஷ் நடத்தினர். பல கவர்ச்சிகரமாக திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம், 500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அதன் உரிமையாளரை கைது செய்துள்ளனர். அந்த நிறுவனத்தின் முக்கிய ஏஜன்டாக விளங்கிய, விருதுநகரைச் சேர்ந்த சுந்தர்ராஜன், 60, என்பவரை போலீசார், நேற்று முன்தினம் சிவகாசியில் கைது செய்தனர்.

