ADDED : ஜூலை 15, 2011 12:06 AM
துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அடுத்த பில்லுப்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி(35).
இவர் திண்டுக்கல் செந்துறையில் பேக்கரி மற்றும் ஸ்வீட் ஸ்டால் நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் பில்லுப்பட்டிவந்த பின், அன்று மாலை 5.30 மணியளவில் தனது டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி டூவீலரில் செந்துறை செல்லும் வழியில் துவரங்குறிச்சி செட்டியாகுளம் என்னுமிடத்தில் செல்லும்போது, டிப்பர் லாரி, டூவீலர் மீது மோதி பரிதாபமாக பலியானார். துவரங்குறிச்சி போலீஸார் லாரி டிரைவர் ஈஸ்வரனை கைது செய்தனர். * திண்டுக்கல் மாவட்டம் சித்திரை கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம்(32). இவர் நேற்று மாலை ஸ்பிளண்டர் டூவீலரில் செந்துறை சென்று விட்டு இரவு 7.30 மணியளவில், துவரங்குறிச்சி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி செல்லும் வழியில், சிங்கிலிப்பட்டி என்னுமிடத்தில் வரும்போது, அடையாளம் தெரியாத வாகனம், டூவீலரில் மோதியதில் பலியானார்.