ADDED : ஜூலை 14, 2011 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சி கே.கே.நகர் ஆனந்த் நகரைச் சேர்ந்தவர் குணாளன் (51).
இவரது மனைவி அருள்ராணி. குணாளன் பாரதிதாசன் பல்கலையில் கிளார்க்காக பணிபுரிந்தார். மனைவி அருள்ராணி பள்ளி ஆசிரியையாக உள்ளார். தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். குடிப்பழக்கம் கொண்ட குணாளனுக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு அறையில் படுக்கச் சென்ற அவர், காலையில் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அருள்ராணி கே.கே.நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வீட்டுக்கு வந்த போலீஸார் கதவை உடைத்து பார்த்தபோது, குணாளன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
கே.கே.நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

